மேலும் அறிய
Advertisement
12 PM Headlines: மதியம் 12 மணி தலைப்பு செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
Headlines Today:
தமிழ்நாடு:
- ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேரணியாக நினைவிடத்துக்குச் சென்றனர்.
- ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி; களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம் என நினைவிடத்தில் உறுதி
- ஜி20 மாநாடு குறித்த பிரதமர் கூட்டத்தில் அதிமுக சார்பில் தான் பங்கேற்பது மகிழ்ச்சி தருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- நெல்லை, களக்காடு, தலையணையில் இன்று முதல் வியாழன் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் மின்வாரிய பராமரிப்பு காரணமாகவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
- செங்கல்பட்டு அருகே குறுந்திரை கிராமத்தில் புதிய கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்
- பிரசித்தி பெற்ற முத்துப்பேட்டை தர்க்காவில் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. சந்தனக்கூடு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும்.
- தொடர் மழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு, பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை.
- திருவண்ணாமலையில் தீபத்திருவிழா ஒட்டி மகாதீபம் ஏற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, மகாதீபம் ஏற்ற கொப்பறை மலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்தியா
- குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
- குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சபர்மதி தொகுதியில் பிரதமர் மோடி வாக்களர்களுடன் வாக்காளராக இன்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
- குஜராத் தேர்தலை மக்கள் திருவிழா போல் கொண்டாடுவதாக வாக்குப்பதிவுக்குப் பின் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம்
- ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.
- பெலாரஸ் ரஷ்யா நாடுகள் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் கையெழுத்து, உக்ரேன் மீதான தாக்குதல் 8 மாதங்கள் மேல் நீடிக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம்.
விளையாட்டு
- உலகக்கோப்பை கால் பந்து போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு வலுவான கால் பந்து அணியை உருவாக்கத் திட்டம் - இந்தியக் கால்பந்து கூட்டமைப்புத் தலைவர் கல்யாண் சௌபே
- உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கால் பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தீவிர சிகிச்சை. விரைந்து குணம் பெற மருத்துவமனை முன் கூடி மக்கள் பிரார்த்தனை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion