மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு - மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்ட தலைவர் கைது
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு, மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
”மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், கருத்து கேட்காமலும், உயர்கல்வி துறை அமைச்சரான எனக்கும் தெரிவிக்காமல், கௌரவ விருந்தினர் என அழைக்கிறார்கள். துணைவேந்தரை கேட்டால் , தனக்கு எதுவும் தெரியாது எனவும் எல்லாம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் சொல்கிறார்கள் என தெரிவிக்கிறார். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இடையே, ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் வருகிறது.
ஆளுநரை பொறுத்தவரை அவர் ஆளுநராக இருப்பதைவிட, பாஜகவின் பிரச்சாரத்தை செய்கின்ற ஒருவராகத்தான் இருக்கிறார். அரசை ஆலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு, மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்