தேனி : வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடி நீருக்கான தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடிநீருக்கான தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி : வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகில் செல்லும் வழியில் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணை, இந்த அணை மூலம் மதுரை மாவட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கான விவசாய தேவையான நீரையும் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்கும் இந்த அணையின் நீரைக்கொண்டே பயன்படுகிறது. அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதியானது 111 அடி உயரம் கொண்டது.  இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும் என்பதால், கடந்த மாதத்தில் டவ்தே புயல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கொடைக்கானல் குரங்கணி போடி போன்ற மலையடிவார பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் நீரானது நேரடியாக வைகை அணை சென்றடைந்து. அணையில்  நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. நீண்ட மாதங்களாக வைகை அணையில் 61 அடிக்கு மேல் நீர்த்தேக்கம் இல்லாம இருந்த வந்தநிலையில்  தற்போது பெய்த கனமழை எதிரொலியால் சில நாட்களிலேயே நீர் மட்டமானது உயரத் தொடங்கியது

தேனி : வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

இதனடிப்படையில் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனத்திற்கு  45,041 ஏக்கர் பரப்பளவு நிலங்களுக்கு தேவையான தண்ணீரானது வினாடிக்கு 900 கன அடி வீதம் வைகை அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் வரும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீரானது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் மதுரை, திண்டுக்கல் பகுதி விவசாயத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

தேனி : வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Tags: vaigai dam dam water opening theni district news

தொடர்புடைய செய்திகள்

தேனி : இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

தேனி : இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!

மதுரை : குறையும் தொற்று : தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் ! இருப்புநிலை என்ன?

மதுரை : குறையும் தொற்று : தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் ! இருப்புநிலை என்ன?

கொடைக்கானல் : மூலிகை வேருடன் முகக்கவசம் : மகளிர் சுய உதவிக்குழுவினரின் அசத்தல் முயற்சி!

கொடைக்கானல் : மூலிகை வேருடன் முகக்கவசம் : மகளிர் சுய உதவிக்குழுவினரின் அசத்தல் முயற்சி!

தேனி : ”வீடே வேண்டாமப்பா” : வீடு கட்டும் கனவில் நனைந்த நடுத்தர வர்க்கத்தினரின் புலம்பல்!

தேனி : ”வீடே வேண்டாமப்பா” :  வீடு கட்டும் கனவில் நனைந்த நடுத்தர வர்க்கத்தினரின் புலம்பல்!

மதுரை : மாற்றுத்திறனாளி பாட்டியை பார்சல்போல கட்டிப்போட்டு செயினைப் பறித்த பேத்தி கைது!

மதுரை : மாற்றுத்திறனாளி பாட்டியை பார்சல்போல கட்டிப்போட்டு செயினைப் பறித்த பேத்தி கைது!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !