மேலும் அறிய
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் - என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
வடகிழக்குப் பருவமழை காலத்தில், பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களை TN-ALERT மற்றும் SACHET ஆகிய செயலிகள் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான TN-ALERT-என்ற செயலி
”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில், வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான TN-ALERT-என்ற செயலி குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேற்கண்ட செயலியும் தொடங்கி வைக்கப்பட்டது.
நீர்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்
TN-ALERT செயலியில், நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை தகவல்களை, பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். மேலும், அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழையளவு, நீர்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விபரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா என்பதை அறியும் வசதியும் இச்செயலியில் உள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
மேலும், பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கை மேற்கொள்ள அடிப்படையாக உள்ள TN-ALERT மற்றும் SACHET ஆகிய செயலிகளை Google play store மற்றும் IOS play store மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி, பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லாத் தொலைபேசி எண்களான “1077” மற்றும் 04575 - 246233 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் இச்சேவைகளை பயன்படுத்திக் கொண்டு, வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை முறையாக பின்பற்றிட வேண்டும்” என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















