Oct 31 Release : கொட்டும் மழை...அக்டோபர் 31 ரிலீஸாக வரிசைகட்டி நிற்கும் படங்கள்
October 31 Release : தமிழகம் முழுவதும் கடும் மழை பொழிந்து வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி பல்வேறு படங்கள் ரிலீஸை எதிர்பார்த்து உள்ளன

தீபாவளியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் வரும் அட்கோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படங்களின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என பார்க்கலாம்
ஆர்யன்
ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால், மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆர்யன். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
ஆண் பாவம் பொல்லாதது
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ' படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது.
பாகுபலி ரீரிலீஸ்
ராஜமெளலியில் பாகுபலி திரைப்படம் இந்த ஆண்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அக்டோபர் 31 ஆம் தேதி மீண்டும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக இந்த படத்தை வெளியிடுகின்றன. ரீரிலீஸில் படம் முதல் நாளில் ரூ 100 கோடி வரை வசூல் செய்யும் என சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளார்கள். மழை அவர்களின் கணிப்பை பொய்யாக்குமா ?
மாஸ் ஜதாரா
தெலுங்கில் ரவி தேஜா மற்றும் ஶ்ரீலீலா இணைந்து நடித்து உருவாகியுள்ள படம் மாஸ் ஜதாரா. இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது





















