iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
iPhone 17 Flipkart Discount: ஃப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026-ல் அதிரடி தள்ளுபடியை பெறுகிறது ஐபோன் 17. ஜனவரி 17-ம் தேதி சேல் தொடங்கப் போகுது. ரெடியா இருங்க.

ஃப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026, இந்தியாவில் ஜனவரி 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விற்பனையின் போது, மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், புளூடூத் ஸ்பீக்கர்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும். இந்த விற்பனை நிகழ்வு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆரம்பகால சலுகைகள் இப்போது ஃப்ளிப்கார்ட்டின் வலைத்தளத்தில் நேரலையில் உள்ளன. இப்போது, 5 வண்ண விருப்பங்களில் வழங்கப்படும் புதிய ஐபோன் 17-க்கு நிறுவனம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் தள்ளுபடி விலையில் iPhone 17
ஃப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனையின் ஆரம்ப சலுகைகள் தற்போது மின்வணிக தளத்தில் நேரலையில் உள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஐபோன் 17-ஐ 74,990 ரூபாய் தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2025 செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 82,900 ரூபாயாக இருந்த அடிப்படை 256GB ஐபோன் 17 மாடல், தற்போது ஃபிளிப்கார்ட்டில் இந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இதில், நேரடி விலை குறைப்பு, கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் பிற வங்கி தள்ளுபடிகள் அடங்கும். ஐபோன் 17, லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ் கிரீன், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும். பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் உறுப்பினர்கள், ஜனவரி 16-ம் தேதி முதலே, அதாவது 24 மணி நேரம் முன்கூட்டியே இந்த சலுகையை பயன்படுத்தி ஐபோனை வாங்க முடியும்.
ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள், HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் 10 சதவீத உடனடி தள்ளுபடி மற்றும் எளிதான EMI விருப்பங்களை பெறலாம். அதோடு, மற்ற வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் வழங்கும்.
ஐபோன் 17-ன் அம்சங்கள்
ஐபோன் 17-ன் முக்கிய அம்சங்களில், 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவுடன், 120Hz வரை புதுப்பிப்பு வீதம், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் 3,000 நிட்ஸ் வரை உச்ச பிரகாசம் ஆகியவை அடங்கும். இது ஐபோன் 16-ன் 6.1-இன்ச் திரையை 60Hz புதுப்பிப்பு வீதத்தை விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த போன் ஆப்பிளின் A19 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இதில், 16-கோர் நியூரல் எஞ்சின் உள்ளது. இந்த போன் ஐபோன் 16-ஐ விட 40 சதவீதம் சிறந்த CPU செயல்திறனை வழங்குகிறது. கேமராவை பொறுத்தவரை, இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில், 48 மெகாபிக்சல் (f/1.6) பிரதான கேமராவும், 48 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவும் அடங்கும். இது, ப்ரோ மாடல்களைப் போலவே, 18 மெகாபிக்சல் சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.





















