நியோமேக்ஸ் வழக்கில் ஆணையர்களை நியமித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது - நீதிபதி
முக்கிய குற்றவாளியாக உள்ள இயக்குநர்கள் கமலக்கண்ணன், சைமன் ராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஜாமினை ரத்து செய்யக் கோரி வழக்கு.
ரூ.1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக்குழுவை அரசு நியமிக்க வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்.
நியோமேக்ஸ் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்திருப்பது வினோதமாக ஆச்சிரியமாக உள்ளது. எந்த அதிகாரத்தில் இவ்வாறு நியமித்தார்கள் என்று தெரியவில்லை - நீதிபதி கருத்து
நியோமேக்ஸ் வழக்கு
நியோமேக்ஸ் நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்த விவகாரம் நிறுவன இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு, ‘மதுரை தலைமையாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் பல மாவட்டத்தில் அலுவலகங்கள் அமைத்து செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறிய படி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசீல் புகார் மனு அளித்தனர் இதனடிப்படையில் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சிலர் கைது செய்யபட்டனர்.
வினோதமாக, ஆச்சிரியமாக உள்ளது.
ஜாமினில் வெளியே வந்த இவர்கள் தற்போது வழக்கை நீர்த்துப் போகும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் சேர்ந்த ரவிசங்கர், மற்றும் ராஜ்குமார் என்பவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பி செல்வன் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 26 நிறுவனங்களின் வங்கி கணக்கு பரிமாற்றம் முழுமையாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 முக்கிய வங்கி கணக்குகளில் இருந்த பணம் 40 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது
அப்போது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், இது போன்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளை விட பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை தான் முக்கியத்துவம் கொடுத்து பார்க்க வேண்டும். பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர்களை நியமனம் செய்தது தவறு? முதல்முறையாக நியோமேக்ஸ் வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்திருப்பது வினோதமாக ஆச்சிரியமாக உள்ளது.
இந்த நிதிநிறுவன மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்துவிடக்கூடாது. மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பித்துவிடலாம் என்ற நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ளும். நிதிநிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது.
வழக்கு ஒத்திவைப்பு
நிதிநிறுவன மோசடிகளை தடுக்க உள்துறை செயலகத்துக்கும், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுக்கும் நேரம் வந்துவிட்டது. ரூ.1000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படும் எனக்கூறி நியோமேக்ஸ் நிறுவன வங்கி கணக்கு, வங்கி கணக்கில் உள்ள பண விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.