மேலும் அறிய
சிவகங்கை அருகே நரிக்குறவர்கள் எருமை மாடு, ஆட்டு கிடாக்களை பலியிட்டு நூதனத் திருவிழா
மழை பெய்து, விவசாயம் செழித்திடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட, நாடு நலம் பெறவும் கொடை விழா நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நரிக்குறவர்களின் நூதன திருவிழா
சிவகங்கை அருகே பழமலை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கொடை விழாவினை முன்னிட்டு 29 எருமை மாடுகள், 45 ஆடுகள் பலியிட்டு, ரத்தத்தை தொய்த்து வினோத வழிபாடு நிகழ்ச்சி நடத்தியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

நரிக்குறவர் இன மக்களின் கொடை விழாவினை முன்னிட்டு காலனியின் மேற்குப் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே குடில் அமைத்து சுடலைமாடசாமி, மதுரை மீனாட்சி அம்மன், பத்ரகாளி உள்ளிட்ட தெய்வங்களுக்கு குல வழக்கப்படி எருமையும், வெள்ளாடும் பலி கொடுத்து கொடை விழா நடத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக நடைபெறாத இவ்விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சிவகங்கையை பூர்விகமாக கொண்ட நரிக்குறவர் இன மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து குடில் அமைத்து விழாவில் பங்கேற்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் நீண்ட நாட்களின் பின் மல்லிகைப் பூ விலை இயல்பு நிலைக்கு வந்தது..... கிலோ 600 ரூபாய்
குல வழக்கப்படி 90 நாட்கள் அசைவ உணவு அருந்தாமல் விரதம் இருந்து இவ்விழாவை கொண்டாடுகின்றனர். தங்களது உற்றார், உறவினர்கள் அழைத்து தெய்வங்கள் முன்னிலையில் எருமை மாடு கிடா ஆடுகளை பலியிட்டு ரத்தத்தை அருந்துகின்றனர். எருமை வேடத்தில் பெண்களை அரக்கர்கள் துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து குலதெய்வத்திடம் முறையிட்டதால், அவர்களை அம்மன் வதம் செய்ததை நிறைவு கூறும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. தற்போது மழை பெய்து, விவசாயம் செழித்திடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட, நாடு நலம் பெறவும் கொடை விழா நடைபெறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement