மதுரையில் நீண்ட நாட்களின் பின் மல்லிகைப் பூ விலை இயல்பு நிலைக்கு வந்தது..... கிலோ 600 ரூபாய்
பூக்களின் விலை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இன்று (12.9.2022) மல்லிகைப்பூ விலை ரூ.600ஆக குறைந்துள்ளது.
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருந்தது. அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
#abpnadu மதுரையில் - இன்றைய பூ மார்கெட் நிலவரம் 12.9.2022(கிலோவுக்கு)
— arunchinna (@arunreporter92) September 12, 2022
மல்லி - ரூ.600 - ரூபாய்700
சம்மங்கி - 80
பிச்சி - 400
முல்லை - 400
ப.ரோஸ் - 100
அரளி - 150
மற்ற பூக்களின் விலையும் குறைவாக உள்ளது.@abpnadu | @SRajaJourno | @AgencyTamil pic.twitter.com/GbKujV1beA
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்