Popular Front Of India : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை.. எந்தெந்த இடங்கள்?
சோதனை நடைபெறுவதையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, இஸ்லாமியர் ஒடுக்குமுறை என இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முன் நின்று வருகின்றனர். இந்த அமைப்பை தடைசெய்ய வேண்டும் என வேறு சில அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை இளையான்குடி பகுதியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ என்று சொல்லக்கூடிய தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் NIA சோதனை
— arunchinna (@arunreporter92) September 22, 2022
மதுரை மாநகர் நெல்பேட்டை, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேனி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் வீடுகளில் nia அதிகாரிகள் சோதனை. @SRajaJourno pic.twitter.com/Pq7JwlEVHD
#BREAKING
— Raja Shanmugasundaram (@SRajaJourno) September 22, 2022
NIA officials are conducting surprise raids at the houses of SDPI and Popular Front of India executives living in important cities of Tamil Nadu including Coimbatore, Nellai and Madurai @abpnadu