அதிரடி ஆக்ஷன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள்
முதல்வன் பட பாணியில் மனு கொடுத்தவரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் உதயநிதி, தவறான தகவல் தெரிவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் உதயநிதி 3 நாள் சுற்றுப்பயணம்
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த 9-ம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். தொடர்ந்து நேற்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இன்று இராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் சிவகங்கை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வன் பட பாணியில் அதிரடி ஆக்சன் எடுத்துள்ளார். இதானல் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.