மேலும் அறிய

Jallikattu : "ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி இருக்காது" - அமைச்சர் மூர்த்தி அதிரடி தகவல்!

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது, என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி.

கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை, அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது. - அமைச்சர் தகவல்.

ஜல்லிக்கட்டு தொடர்பான ஆய்வுக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையோட்டி ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15- ஆம் தேதி பாலமேட்டிலும், 16- ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.  ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர், ஜல்லிகட்டு கமிட்டியினர், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

மாவட்ட ஆட்சியர் சங்கீதா

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில் "ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடைபெறும், முன்பதிவுக்கும், களத்தில் வரும் காளைகளின் புகைப்படங்களுக்கு வேறுபாடுகள் உள்ளன, புகைப்படங்கள் மாற்றம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரில் காளைகளை அறிவிக்க கூடாது, காளை உரிமையாளரின் பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும்" என கூறினார்.

அமைச்சர் மூர்த்தி

கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில் "காளைகளின் கொம்பின் மீது ரப்பர் குப்பிகள் வைக்க கால்நடைத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இந்த முறை நடைமுறைக்கு சாத்தியமல்ல, ஒவ்வொரு காளைகளின் கொம்பு வெவ்வேறு விதமாக இருக்கும் ஆகவே ரப்பர் குப்பிகள் வைக்க இயலாது. காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் வைப்பதற்கு பதிலாக மாற்று வழியை கால்நடைத்துறை அறிவிக்க வேண்டும்" என கூறினார் என்றார்.
 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசுகையில் "காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு நடைபெறும். அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு பரிசுகளும் வழங்குவதில்லை. ஒவ்வொரு ஊரிலும் நன்கொடையாளர்கள் வழங்க கூடிய பரிசுகள் காளை உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும்.
 
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அரங்கில் போட்டி நடைபெறக்கூடிய தேதி பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும். சாதி பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை. அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது" என தெரிவித்தார்.
 
 

தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Embed widget