மேலும் அறிய
Advertisement
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
எனக்கும், திமுகவுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர் யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் மற்றும் மேலமடை பகுதி மேம்பாலப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, “தமிழ்நாட்டில் பெரும் மழை பெய்த காரணத்தினால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நூலகத்தை நேரில் ஆய்வு செய்தேன். இதுவரை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 நபர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாலம் குறித்த பணிகள்
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது. மதுரை மேலமடை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும், இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாடுங்கள் கட்டப்படுகிறது, ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலங்கள் அதிக அளவில் நீர் வருவதால் சேதமடைகிறது. ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை, எதிர்பாராத விதமாக இது போன்ற ஆற்றுப் பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும்.
நான் அழுத்தம் கொடுக்கவில்லை
2001 ஆம் ஆண்டு முதல் திருமாவளவன் உடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை. எனக்கும், திமுகவுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர் யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார். தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து பராமரித்து வருகிறது, நெடுஞ்சாலைகள் பராமரிப்பு என்று காணப்பட்டால் அது குறித்து "நம்ம சாலை" என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த 48 மணி நேரத்தில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மத்திய சிறைவாசிகள் தயாரித்த பொருட்களுக்கு போலி ரசீது? சிக்கும் சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11பேர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion