மேலும் அறிய

மதுரை மத்திய சிறைவாசிகள் தயாரித்த பொருட்களுக்கு போலி ரசீது? சிக்கும் சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 11பேர்

போலி ரசீது மூலமாக பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தற்பொழுது வெவ்வேறு சிறைகளில் அதிகாரிகளாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட அரசு பொருட்கள் விற்பனையில் போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய், மோசடி புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை சிறைத்துறை எஸ்பி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.           
 
மதுரை மத்திய சிறையில் மோசடி புகார்
 
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக எழுதுபொருட்கள், மருத்துவ பொருட்கள்  தயாரிக்கப்பட்டு அரசு அலுவலங்கள், நீதின்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடுகிறது. இந்த விற்பனையில் கடந்த 2021ஆம் ஆண்டில் போலி ரசீது தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடி புகார் தொடர்பாக கணக்கு தணிக்கைதுறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது 1கோடி 51லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்களை விற்பனை நடைபெற்றதாக கூறப்பட்ட நிறுவனங்களில்  விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
 
சிறையில் நடந்த விசாரணை
 
மேலும் இதேபோன்று தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளிலும் சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14.5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தணிக்கைத்துறை தெரிவித்ததோடு , ஊழல் தடுப்பு இயக்குநரக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் நடத்திய விசாரணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை  முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு
 
அதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா  (தற்போது கடலூர் மத்திய சிறையில் எஸ்பியாக உள்ளார்) பணியாற்றி வரும் ஊர்மிளா(வயது 39), மதுரை சிறையின் சிறை அதிகாரியும், தற்போது பாளையங்கோட்டை சிறை ADSP வசந்தகண்ணன்,  மதுரையில் பணியாற்றி, தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன்,  மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜாபருல்லாகான்  முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையை சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த முறைகேடு வழக்கில் விசாரணையின் முடிவில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் போலி ரசீது மூலமாக பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தற்பொழுது வெவ்வேறு சிறைகளில் அதிகாரிகளாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget