MGR Birthday: அதிமுக கொடி ஏற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு மோதல் - பெரியகுளத்தில் பரபரப்பு
கொடிக்கம்பத்தை பிடித்து ஆட்டி சேதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடியேற்றுவதற்காக தயார் செய்து வைத்திருந்தனர்.
Jallikattu 2024 LIVE: களத்தில் தண்ணி காட்டும் காளைகள்! அடங்காமல் அடக்கும் முயற்சியில் காளையர்கள்!
ஆனால், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி பறக்க விட்டனர். இதனைக்கண்ட இபிஎஸ் தரப்பினர் ஆத்திரமடைந்து வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. மேலும் இதில் இபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முருக்கு உடைய ராமர் மற்றும் தேனி நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஓபிஎஸ் தயார் செய்து நிறுவப்பட்ட கொடி கம்பத்தில் இருந்து கொடியை அவிழ்த்து விட்டனர்.
அதன் பின்பு கொடிக்கம்பத்தை பிடித்து ஆட்டி சேதப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியை ஒழிகவென்றும், இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ் ஒழிகவென்றும் எதிர் எதிரே கோசமிட்டனர். இதனால் பழைய பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

