மீனாட்சியம்மன் கோயில் யானை உடல்நிலை வேகமாக சீராகி வருகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பார்வதி யானை பராமரிக்கப்படும் இடத்தில் புறாக்கள் அமராமல் தடுக்க அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் ஆலோசனையின் பேரில் ஸ்பைக் அமைக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். சித்திரைத் திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 'பார்வதி' என்ற சுமார் 26 வயதுடைய பெண் யானை ஒன்று கோயிலில் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு கோயில் விழாவில் பங்கேற்ற பார்வதி யானை விழாவின்போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டது இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதிக கவனத்துடன் யானையை பராமரிக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
At the Meenakshi Amman Koil today, I spent time w the temple🐘 Parvati. Relieved she's recovering from a drug-resistant infection likely from bird droppings; I've proposed a solution to avoid pigeons nesting in her compound. My emotional bond w this gentle giant spans years🥰 pic.twitter.com/wCfoeDkZTT
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) March 13, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்