மேலும் அறிய
மருதுபாண்டியர் & தேவர் குருபூஜை: சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
மருதுபாண்டியர்- தேவர் குருபூஜை: அக். 27 மற்றும் 30 –ல் பள்ளிகளுக்கு விடுமுறை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி
Source : whats app
மீண்டும் ஒரு நாளில் பள்ளிகள் இயங்குவதற்கு மாவட்ட கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
காளையார்கோயில் மற்றும் இராமநாதபுரத்தில் ஜெயந்திவிழா
சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரது குரு பூஜையை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களைச் சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி வெளியிட்ட செய்தியில்...,” சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 224-ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 118 –ஆவது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
”சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் பேருந்து வழித் தடத்தை மாற்றி அமைத்தும், மாவட்டம் முழுவதும் உரிய பாதுகாப்பு கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருகின்ற 27.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங் களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேறு ஒரு நாளில் பள்ளிகள் இயங்குவதற்கு மாவட்ட கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”. என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















