மேலும் அறிய
Advertisement
தென் தமிழகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகள்...!
’’தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே திருமலையாபுரத்தை சேர்ந்தவர் துரைமுருகன் என்பவர் மீது 7 கொலை வழக்கு உட்பட 35 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று என்கவுண்டர்'’
1. சிவகங்கையில் நேற்று விடுதலை போராட்ட வீராங்கனை குயிலியின் நினைவு தினத்தையொட்டி வேலுநாச்சியார் நினைவு மண்டப வளாகத்தில் உள்ள குயிலி நினைவுத்தூணில் வாரிசுகள், சமுதாயத் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்ராஜ், ஆலயா, உதயம் என 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முத்திரையை போலியாக தயாரித்து ஆடைகளில் ஒட்டி விற்பனை செய்த ஜவுளி கடை உரிமையாளர், மகன் கைது- 3 பேர் தலைமறைவு.
3. தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே திருமலையாபுரத்தை சேர்ந்தவர் துரைமுருகன் என்பவர் மீது 7 கொலை வழக்கு உட்பட 35 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்டார்.
4. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 18.15 லட்சம் கையாடல் செய்த வழக்கில் சங்க தலைவரை போலீசார் கைது- செயலாளர் தலைமறைவு
5. 'கோயில் பூஜைகளில் தலையிட அறநிலையத் துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ, முதல்வருக்கோ அதிகாரமில்லை என பா.ஜ.க முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா காரைக்குடியில் பேட்டி
6. ஆந்திராவில் பைக் ரேஸ் பயிற்சி பெற்று மதுரையில் தொடர் நகைபறிப்பில் ஈடுபட 4 கொள்ளையர்கள் கைது -120 சவரன் நகைகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
7. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் உதவி பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம் நாணயங்களை இட்ட ‘கல்லாபெட்டி’ பொக்கி ஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
8. 5800 ரூபாயை முன்பணமாக கட்டினால் வங்கியில் லோன் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் மதுரை செபஸ்தியாபுரத்தை சேர்ந்த செல்வராணி என்பவரை போலீசார் கைது செய்தனர்
9. மன்னார் வளைகுடா கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 3ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 21 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74943-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 28 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion