மேலும் அறிய

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை - ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்

நாகலெட்சுமி தற்கொலை சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு.

மதுரை மாவட்டம்  கள்ளிக்குடி பகுதியில் மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் -  நாகலட்சுமி தம்பதிகளுக்கு  சங்கீதா, விஜய தர்ஷினி, தேன் மொழி, சண்முகப் பிரியா, பாண்டி சிவானி என ஐந்து குழந்தைகள் உள்ளனர். நாகலெட்சுமி மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்துவருதால் இவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர், 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணி வழங்கி ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து  பெண் தற்கொலை -  ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்
 
இந்த சூழலில், சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்ற போது மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியை தகாத வார்த்தையில் பேசி இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி நேற்று மதியம் மையிட்டான் பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது  சிவரக்கோட்டை பகுதிக்கு அரசு பேருந்து வந்த பொழுது நாகலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் குழந்தைகளை கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து  பெண் தற்கொலை -  ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்
 
பேருந்தில் இருந்து குதித்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தனது தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் மையிட்டான்பட்டி கிளார்க் முத்து வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியது தான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பணிக்கு செல்ல விடாமல் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறந்த நாகலட்சுமியின் கைக்குழந்தைகள் அழுதது பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
 
மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து  பெண் தற்கொலை -  ஊராட்சி செயலாளர் சஸ்பென்ட்
 
தற்கொலை செய்த சம்பவத்தில் ஊராட்சி செயலர் முத்து, துணைத்தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாகபிரிவின் எண் 306 கீழ் கள்ளிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள 3 பேரையும் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மையிட்டான்பட்டி பகுதியில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் ஊராட்சி செயலர் முத்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
 
Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget