மேலும் அறிய
Advertisement
Vijay Fans: 30 ஆண்டு திரைப்பயணம்: ஆண்களுக்கும் இலவச டிக்கெட் வழங்கிய விஜய் ரசிகர்கள்...! மதுரையில் கொண்டாட்டம்..
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் வழங்கிய நிலையில் ஆண்களுக்கும் இலவச டிக்கெட்டுகளை விஜய் ரசிகர்கள் வழங்கினர்.
இளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் 1993 -ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
நடிகர் விஜயின் திரையுலக பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகளாகிய நிலையில் இதனை கொண்டாடும் விதமாக தமிழகமெங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடிகர் விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்த வகையில் மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆண்கள், பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
நீங்க எங்க போகணும் சொல்லுங்க டிக்கெட் இவங்க எடுப்பாங்க- ஆண்களுக்கும் இலவச பேருந்து டிக்கெட் வழங்கிய விஜய் ரசிகர்கள்.
— arunchinna (@arunreporter92) December 4, 2022
30ஆண்டுகால திரைப்பயணத்தை விஜய் தொட்டுள்ளதை முன்னிட்டு மதுரைரசிகர்கள் இவ்வாறு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்@actorvijay @BussyAnand @MaduraiMathan2 #madurai pic.twitter.com/kA3GLEb7hK
மதுரை மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் 2 பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்று ஒரு நாள் விஜய் ரசிகர்கள் டிக்கெட்டுகளை எடுத்து பயணிகளுக்கு வழங்கினர்.
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் வழங்கிய நிலையில் ஆண்களுக்கும் இலவச டிக்கெட்டுகளை விஜய் ரசிகர்கள் வழங்கினர். மேலும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமூட்டினார்.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை ஒரு வருடம் வழங்க முடிவு ; விஜய் ரசிகர்களின் அசத்தில் திட்டம் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion