மேலும் அறிய
Advertisement
குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை ஒரு வருடம் வழங்க முடிவு ; விஜய் ரசிகர்களின் அசத்தில் திட்டம் !
தளபதியின் 30 ஆண்டு திரைப் பயணத்தை ஆரோக்கியமாக கொண்டாடும் விதமாகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தும் விதமாகவும் பால், பிரட், முட்டை, வாழைப்பழம் வழங்க துவங்கியுள்ளோம்.
இளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் 1993 -ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
#madurai | மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பாக நடிகர் விஜயின் 30 ஆண்டு கால திரை உலக பயணத்தை முன்னிட்டு மதுரை புறநகர் திருநகர் பகுதியில் உள்ள் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பால் முட்டை பழம் ரொட்டி வாரந்தோறும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.@BussyAnand | @actorvijay pic.twitter.com/VtncadPHiJ
— arunchinna (@arunreporter92) December 3, 2022
இந்நிலையில் நடிகர் விஜயின் 30 ஆண்டுகால கலைப்பயணத்தை கொண்டாடும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணி சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகள், உணவுகள் என வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகப்படுத்தும் பால், பிரட், முட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து ஒருவருடம் இந்த பணியை தீவிரமாக செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து தொண்டரணி மாவட்ட தலைவர் திருநகர் மருதுபாண்டியன் தெரிவிக்கையில்," விஜய் மக்கள் இயக்க நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர். மதுரையிலும் செய்து வருகிறோம். இந்நிலையில் தளபதியின் 30 ஆண்டு திரைப் பயணத்தை ஆரோக்கியமாக கொண்டாடும் விதமாகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தும் விதமாக பால், பிரட், முட்டை, வாழைப்பழம் வழங்க துவங்கியுள்ளோம். திருநகர் பகுதியை தொடர்ந்து திருமங்கலம், கள்ளிக்குடி, ஹார்விப்பட்டி என இதனை 5 டீம் செய்ய உள்ளோம். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 50 குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அங்கன் வாடிகளில் மாற்றி, மாற்றி உணவு வழங்குவோம். ஒரு ஆண்டு முழுவதும் இதனை செய்ய முடிவெடுத்துள்ளோம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion