மேலும் அறிய
Advertisement
Varisu Vs Thunivu: யாரு பெருசு..? போஸ்டர் அடிச்சு காட்டும் மதுரை விஜய் - அஜித் ரசிகர்கள்..!
துணிவுக்கு பின்னாடி ஆளுங்கட்சி, 2026ன் வருங்கால முதலமைச்சர் விஜய் , மாண்புமிகு ஆகும் ஏ.கே - மதுரையில் அரசியல் வசனங்களுடன் ஒட்டப்பட்டுள்ள அஜித் - விஜய் ரசிகர்களி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி நடிகர் அஜித்தின் துணிவு, நடிகர் விஜயின் வாரிசு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வாரிசு - துணிவு திரைப்படங்களின் பர்ஸ்ட்லுக் தொடங்கி ஆடியோ, ட்ரெய்லர் வெளியீடு என இரு நடிகர்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதன் அடுத்தகட்டமாக போஸ்டர்கள் மூலமாக வார்த்தை மோதலில் ஈடுபட தொடங்கிய ரசிகர்கள் தற்போது இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியாக மோதிக்கொள்ளும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.
மாண்புமிகுக்கு எப்போ ஓகே..?
இதன் உச்சபட்சமாக மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் இன்று பேரன்புமிகு AK என்றும் மாண்புமிகு..க்கு OK வாசகங்களுடன் தலைமைச் செயலகம், பாராளுமன்ற கட்டிடங்களும் இடம்பெற்று அரசியலுக்கு அழைக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் துணிவிற்கு பின் ஆளுங்கட்சி உள்ளது அது நிரந்தரம் கிடையாது. ஆனால் வாரிசுக்கு பின்னாடி மக்கள் கட்சி உள்ளது அதுதான் என்றும் நிரந்தரமானது என்ற வரிகளோடு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
நற்பணி நாயகரே..!
2026ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் அமர இருக்கும் நற்பணி நாயகரே!! எஸ்ஏசியின் வாரிசே வருக! ஏழைகளின் ஒளி விளக்கே நாளைய தலைமுறை பேர் சொல்லும் எம்.ஜி.ஆரே என்ற வாசகங்களுடன் நடிகர் விஜய் வருங்கால முதலமைச்சர் என்ற இருக்கையில் அமர்ந்தவாறு உள்ள படங்களுடன் வாசகங்களுடன் மதுரை முழுவதுமாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இதேபோன்று 2024ன் தேசிய மாடல் என மோடியின் படமும், 2021 திராவிட மாடல் என ஸ்டாலின் படமும், 2026ல் தமிழ் மாடல் என விஜயின் படத்தைவைத்தும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனிடையே வாரிசு பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அவரது தாயிடம் பேசாமல் சென்றது குறித்த வீடியோ வெளியாகி விமர்சனமான நிலையில் அதனை சுட்டிக்காட்டும் வகையில் தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அஜித் ரசிகர்கள் REQUEST விடுத்து அட்வைஸ் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
இதேபோல் நகர் முழுவதிலும் அனைத்து சுவர்களும் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதலை பிரதிபலிக்கும் சுவரொட்டிகளால் அலங்கோலப்பட்டுகிடக்கின்றது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: "பாதாள சாக்கடை அடைப்புத் தெரு..." மதுரையில் புதியதாக உருவாகிய தெரு...! நடந்தது என்ன...?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion