வாரிசு , துணிவு சிறப்பு காட்சிகள் அனுமதியின்றி ரிலீஸ் - 34 தியேட்டர்களுக்கு நோட்டீஸ்
வாரிசு , துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சமூகக் கருத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த தல பொங்கலாக அமைந்து வசூலைக் குவித்து வருகிறது துணிவு.
வாரிசு , துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ் !#madurai | #துணிவு | #வாரிசு | @MaduraiMovies pic.twitter.com/wR0VUF2P4v
— arunchinna (@arunreporter92) January 20, 2023
அதே போல் பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தது குறிப்பிடதக்கது. இப்படி துணிவும் - வாரிசு படமும் பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வாரிசு , துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்