மேலும் அறிய

திருப்பரங்குன்றம் தீபத்தை திருக்குறள் போல் பிரிக்க முடியாது - மத்திய கல்வி அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை இவர்களால் தடுக்க முடியாது. - மத்திய கல்வித்துறை அமைச்சர் பேட்டி.

தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ அதுபோலத்தான் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை தடுக்க முடியாது. தடுக்க நினைப்பவர்கள் முட்டாள்கள், எல்லாம் சிவன் பார்த்துக் கொள்வான் - என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர்
 
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரக்கூடிய வேளையிலே இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது குடும்பத்தினரோடு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பாக அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
செய்தியாளர் சந்திப்பு
 
தொடர்ந்து தரிசனத்திற்கு பிறகு அம்மன் சன்னதி அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” காசி தமிழ் சங்கத்தை 4.0 வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கின்றோம். பாரதப் பிரதமர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி கலை பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலே இந்த காசி தமிழ் சங்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் புகழ்வாய்ந்த ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்தேன், அதன் பிறகு இன்று அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம் செய்தது மகிழ்ச்சி கலை பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலே நம்முடைய பாரதப் பிரதமரின் செயல்பாடு இருந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் இருக்க வேண்டும், அதுதான் தேசிய கல்விக் கொள்கையின் படி இருக்கிறது. ஆளும் தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். மாணவர்களுடைய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் நல்ல ஒரு உயர் பதவியோ அல்லது அதிகாரியாகவும் அவர்கள்  வருவார்கள்.
 
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு ??
 
 நீதியரசர் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றலாம் என்று கூறிய தீர்ப்புக்கு அனுமதி மறுத்து அரசியல் ரீதியாக இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. மதத்தின் மீதும் இந்துக்களுடைய புனிதமாக கருதக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள். சிவபெருமான் அவர்களுக்கு பாடம் புகட்டுவார். மேலும் தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ அதுபோலத்தான் இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை இவர்களால் தடுக்க முடியாது” என்று கூறிவிட்டுச் சென்றார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget