மேலும் அறிய
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி... சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு: வெற்றி நிச்சயம்!
போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
TNPSC, SSC, IBPS, RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பொதுவான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில்
நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்பு
இத்தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-ற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட TNPSC-Group IV தேர்வு முடிவில், இத்தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பயின்ற 5 மாணவர்கள் பணிவாய்ப்பை பெறும் வகையில் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC-Group II&IIA தேர்வில் 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் அரசுப் பணியில் உள்ளனர். தற்போது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக TNPSC/SSC/IBPS/RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பொதுவான இலவசப் பயிற்சி வகுப்புகள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் தகவல்
மேலும், இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்ட நுாலகத்தில் பராமரிக்கப்படும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துறையின் www.tamilnaducareerservices. tn.gov.in என்ற மெய்நிகர்கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கற்றல் இணையதளத்தைப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்புகளில் அதிகளவிலான மாதிரி பயிற்சி தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணாக்கர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படும் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, அரசால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















