மேலும் அறிய
குரல் கொடுத்ததற்கு நன்றி, அரசியல் செய்யாதீர்கள்.. - பூர்ண சந்திரன் குடும்பத்தினர் தெரிவித்தது என்ன? முழு விவரம் !
திருப்பரங்குன்ற உச்சியில் உள்ள தூணில், தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி தீக்குளித்து உயிர் நீத்த இளைஞர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்து அமைப்புகள்
Source : whatsapp
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அர்ஜுன் சம்பத், காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோ நேரில் வந்து அஞ்சலி - இளைஞரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் காசோலை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக வழங்கப்பட்டது.
போலீஸ்பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த இளைஞர் பூர்ண சந்திரன்(40) எம்.பி.ஏ பட்டதாரி, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணின் மீது தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாடு அரசு தீபம் ஏற்ற அனுமதி மறுத்தது. இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் மனமுடைந்த பூரண சந்திரன் நேற்று அவுட்போஸ்ட் ஈ.வெ.ரா சிலை முன்பாக உள்ள போலீஸ்பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நயினார் நாகேந்திரன் 10 லட்சம் காசோலையை வழங்கினார்
இன்று அவரது உடல் பிரத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்கக வைக்கப்பட்டு இருந்தது அங்கு திரண்ட இந்து அமைப்பினர் அவரது புகைப்படம் தாங்கிய பதாகையை ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு துணியை வாயில் கட்டி இருந்தனர். அவரது உறவினர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 10 லட்சம் காசோலையை வழங்கினார். பின் தீக்குளித்து உயிரிழந்த பூர்ண சந்திரன் உடலை வாங்க மறுத்து, இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் அரசு இராஜாஜி பிரேத பரிசோதனை பிணவறையில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும்
பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அரசியல் செய்யாதீர்கள்
அரசிடம் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பூர்ண சந்திரனின் தாயார் காளீஸ்வரி பிணவறை முன்பாக அமர்ந்து கோஷங்களை எழுப்பி வந்த அவர்கள் முன்பாக சென்று, காலில் விழுந்து என் பையனுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி, அரசியல் செய்யாதீர்கள். என் மகன் உடல் வேண்டும் என கண்ணீர் மல்க கதறினார். பின்பு காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்குப் பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக தத்தனேரி மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















