மதுரையில் மாணவர்களுக்கு சைக்கிள்களை கல்வி சீர்வரிசையாக வழங்கிய கிராம மக்கள்..!
கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அரசு உதவியை எதிர்பாராமல் கிராம மக்கள் போட்டி போட்டு உதவிகள் செய்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை அதிகாரிக்கும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .
சிவகங்கை காரைக்குடி அடுத்த, பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 72 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு செய்து பக்கத்து கிராமங்களுக்கு சென்று பெற்றோர்களிடம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தனர். இந்த சீரிய முயற்சியின் வெற்றியாக தற்போது புதிதாக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சைக்கள் வழங்கி கிராம மக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். காரைக்குடி அருகே உள்ள பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15 மாணவர்களுக்கு 1 லட்சம் மதிப்பிலான சைக்கிள் சீர் வரிசை வழங்கப்பட்டுள்ளது.@SRajaJourno pic.twitter.com/8V5yRCYGfv
— Arunchinna (@iamarunchinna) July 5, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்