மேலும் அறிய

Madurai ; தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம் - மதுரையில் சீறிய வைகோ !

சினிமா டயலாக்கை விட்டு வெளியே வரவேண்டும், அவர் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார். - விஜயை தாக்கி வைகோ பதில்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அச்சுறுத்துகின்ற பாணியில் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. -வைகோ பேட்டி*
 
*விஜய் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார்.*
 
தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது - வைகோ பேட்டி
 
கட்சி நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது...,” திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்னை திட்டமிட்டு இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தத் தூணில் விளக்கு ஏற்றும் பழக்கம் இல்லை உச்சிப்பிள்ளையார் கோவிலிலேயே சுடரேற்றுவார்கள். இந்த முறை திட்டமிட்டு அவர்கள் ஏற்ற முயற்சித்ததும், அந்த முயற்சி நடக்கும் போதே துலாக்கோள் நிலையில் இருந்து மீறி நீதியை பறிப்பாளனம் செய்யக்கூடிய நீதி அரசர் இந்துத்துவவாதியை போல தன்னுடைய மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு விளக்கு ஏற்றாவிட்டால் நடப்பது வேறு என்று அச்சுறுத்துகின்ற பாணியில் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. 
 
எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை
 
நீதித்துறை, நிர்வாக துறை, சட்டமன்றம் மூன்றும் சேர்ந்த தான் ஒரு அரசு இயங்குகிறது. நீதித்துறையை சேர்ந்தவர்கள் சமீப காலமாக தனிப்பட்ட சொந்த வெறுப்புகள், சொந்த கருத்துக்களை திணிக்கின்ற முயற்சிகளை அண்மை காலத்தில் தான் அபாயம் சூல்கிறது. ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை மக்கள் ஒற்றுமையாக எடுக்கிறார்கள். இந்துக்கள் ஆகட்டும், இஸ்லாமியர்கள் ஆகட்டும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் அவர்கள் எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை. அந்த நிலைமை தான் நீடிக்க வேண்டும்.
 
தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம் 
 
அதேபோல திடீரென்று வந்தே மாதர கொடியை தூக்கிக்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு அதற்கு உடன்படாததற்கு என்ன காரணம். இது பக்கிம் சந்தர் சட்டர்ஜி தான் எழுதிய ஆனந்தமடம் நாவலில் இந்த வந்தே மாதரம் கவிதையை பதிவு செய்திருந்தார்கள். அரவிந்தர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் போது தமிழ் படுத்தி போட்டிருந்தார்கள். முதல் வரிகள் பிரச்சனை இல்லை கடைசி இரண்டு வரிகள் இந்து கடவுள்களை பெயர்களை சொல்லாமல் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இன்று அவர்களை புகழ்ந்து பாடுகிற விதத்தில் தான் அமைந்திருந்தது. அதனால் தான் வந்தே மாதரத்தை அப்போது ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நேரும் அவர்களும் சொன்னார். வங்கத்து சிங்கம் நேதாஜியும் அதே கருத்தை தான் தெரிவித்தார். இப்போது அது பேசு பொருளாகி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது. புதிதாக எப்படி இந்துத்துவாவை திணிக்கலாம் என்றும், அதுவும் தமிழ்நாட்டிற்குள் எப்படி திணிப்பது என்றும் படு பேராசைப்படுகிறார்கள் எல்லா விதத்திலும். ஆனால் இது தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம். இங்கு அப்படி விஷத்தை கக்கி வேறுபாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்த ஒரு காலம் முடியாது. திராவிட இயக்கத்திலே ஊறி திளைத்த பூமி பெரியார், அண்ணா L, கலைஞரால் என எண்ணற்ற தியாகிகளால் பக்குவப்படுத்தப்பட்ட மாநிலம் தான் தமிழ்நாடு. எனவே இந்த பிரச்சனைகளில் அவர்கள் இந்துத்துவா, ஆர் எஸ் எஸ் பின்னணியில் இந்தியாவை காவி மயம் பார்க்க வேண்டும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். உத்தர் பிரதேசம், பிஹாரில் வேண்டுமென்றால் செய்யலாமே தவிர தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவர்கள் ஒருபோதும் ஒரு சதவீதம் கூட திணிக்க முடியாது என்பது திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
விஜய் அரசியல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு
 
அவர் சினிமா டயலாக்கை விட்டு வெளியே வரவேண்டும், அவர் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார். 41 உயிர்கள் பலியான போது, பதறி துடிக்காமல் ஒருநாள் திருச்சியில் தங்கி விட்டு, மறுநாள் அந்த உயிரற்ற சடங்களுக்கு மலர் வணக்கம் செய்துவிட்டு குடும்பத்தினருக்கு அனுதாபம் இறங்கலும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் இருக்கிறது. கடுகு அளவு பொறுப்புணர்ச்சி கூட இல்லாமல் அவர் இரவோடு இரவாக சென்னைக்கு சென்றதும். 40 நாட்கள் கழிய போகிற நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தான் இடத்திற்கு அழைத்து துக்கம் கேட்பது, இதுவரை எந்த தலைவர்களும் சாதாரண மனிதர் வரை யாராக இருந்தாலும் சொந்தமாக இருந்தால் வீட்டிற்கு சென்று தான் துக்கம் கேட்க வேண்டும். இப்படி ஒரு விசித்திரமான முறையை கொண்டு வந்து, தன்னிடத்திற்கு அழைத்து வந்து அனுதாபம் தெரிவித்து, நிதி கொடுத்தது. அவர் எடுத்து வைத்திருக்கும் புதல் அடியே பிழையாக போய்விட்டது. அவர் எங்க வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அந்த கூட்டத்தை பாதுகாப்பதும், நெரிசலில் பெண்கள், சிக்கிமாண்டு போனதைப் போல ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் அதை நடத்துபவர்கள் தான் பொறுப்பு. அதில் தவறி விட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல புதுச்சேரி என எங்கு சென்றாலும், அந்த பிரச்சாரத்தில் அவர் சொல்கின்ற கருத்தை கவனித்து பார்ப்போம்” என கூறினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget