மேலும் அறிய

ஒரு வருடத்தில் நூறு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் இரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர் - சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவல் !

உண்மையில் ரயில்வேயில் கட்டண உயர்வே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. - சு.வெங்கடேசன் எம்.பி

ஒரு வருடத்தில் நூறு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் இரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். மீண்டும் கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் நியாயமில்லை. - சு. வெங்கடேசன் எம் பி.

 
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டு செய்திக் குறிப்பு
 
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மோடி அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. 2014 க்கு பிறகு இப்போது தான் கட்டணத்தை உயர்த்துவதாகவும் ஆகவே இது ஒன்றும் தவறில்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் படிப்படியாக கட்டணங்களை உயர்த்தினால் பிரச்னை இல்லை என்று கருதுகிறார்கள். உண்மையில் ரயில்வேயில் கட்டண உயர்வே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நடப்பது என்ன? கட்டண உயர்வு பல மறைமுக நடவடிக்கைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக சிறப்பு ரயில் சிறப்பு கட்டணம், தகட்கல், தட்கல் பிரிமியம் பயண ரத்து கட்டணம் போன்ற வகைகளில் கட்டணங்களை விமான கட்டண அளவுக்கு உயர்த்தி உள்ளார்கள். வந்தே பாரத் போன்ற வண்டிகளில் கட்டணம் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி இருக்க கட்டண உயர்வே இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இவற்றின் காரணமாக 2014- 15 க்கு பிறகு 2023-24 காலகட்டத்தில் 132 கோடி பயணிகள் ஓர் ஆண்டு பயணத்தை தவிர்த்து உள்ளார்கள்.
 
மோடி அரசு சாலைக்கு துரத்தியுள்ளது.
 
அவர்களை மோடி அரசு சாலைக்கு துரத்தியுள்ளது. 2014 -15 இல் 822 கோடி பயணிகள் பயணம் செய்தார்கள். 2023-24ல் 690 கோடியாக அது குறைந்துவிட்டது. இது கட்டண உயர்வின் மூலமாகத்தான். மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக 6 கோடி மூத்த குடிமக்கள் பயணத்தை தவிர்த்து உள்ளனர். இப்படி எல்லோரையும் மோடி அரசு தேச நலனுக்கு விரோதமாக விபத்துக்கள் நிறைந்த மாசு நிறைந்த சாலைக்கு துரத்தி உள்ளது. சாதாரண இரண்டாம் வகுப்பு ரயில்கள் 4702 வண்டிகள்2014 -15ல் இயக்கப்பட்டன. அதுவே 2023-24ல் 3313 ஆக குறைந்துவிட்டது. அதாவது 1389 சாதாரண வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சாதாரண மக்கள் சாலைக்கு துரத்தப்பட்டுள்ளனர். இப்படி மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பயணிகளை ரயிலில் இருந்து சாலைக்கு துரத்திவிட்டு மீண்டும் கட்டணத்தை உயர்த்துவது என்பது நியாயம் இல்லை. அது மட்டுமல்ல பயணிகள் குறைந்தாலும் வருமானம் அதிகரித்து உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். வருமானம் 2014 -15 இல் 42189 கோடியாக இருந்தது 2023-24ல் 70693 கோடியாக உயர்ந்துளது. இதன் அர்த்தம் குறைந்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதுதான். எனவே இந்த கட்டண உயர்வு நியாயமற்றது. இது கைவிடப்பட வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன்”. எனவும் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget