மேலும் அறிய

திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !

இந்த மோதலில் முருகேசனுக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானாமதுரை அருகே திருமணம் செய்து தர மறுத்ததால் தகராறு – சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது.

உறவினர் பெண்ணை திருமணம் செய்து தருமாறு தொல்லை
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை அருகே உள்ள சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (29). இவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது உறவினரான முருகேசனின் மகளை திருமணம் செய்து தருமாறு சிவபாலன் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும், இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
 
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
 
இந்த நிலையில், இன்று சிவபாலனுக்கும், முருகேசனின் மகன் அருண்ராஜாவுக்கும் (19) இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவபாலன் வாளால் தாக்க முயன்றதாக அருண்ராஜா தனது தந்தை முருகேசனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகேசன், சிவபாலனிடம் சென்று விசாரித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் முருகேசன் அரிவாளால் சிவபாலனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த மோதலில் முருகேசனுக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை போலீசார், சிவபாலனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக முருகேசன் (50), அவரது மகன் அருண்ராஜா (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கான காரணம் மற்றும் கொலை நடைபெற்ற விதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மற்றும் மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை போலீசார் தடுப்பதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்தியாளர்கள் தங்களது பணியை சுதந்திரமாக மேற்கொள்ள காவல்துறை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை.. சாவகாசமாக தங்கி, சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்!
துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget