மேலும் அறிய

SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

2 கார்களுமே சிறப்பான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இன்ஜின் தேர்வுகளைக் கொண்டுள்ளன. இதில் விலை, பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்கள் அடிப்படையில் எது சிறந்தது எனப் பார்ப்போம்.

நடுத்தர அளவிலான எஸ்யூவி கார் சந்தையில் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி தற்போது மிகவும் கடுமையாகி வருகிறது. சந்தைக்கு மீண்டும் வந்துள்ள புதிய ரெனால்ட் டஸ்டர், மாருதி சுஸுகி விக்டாரிஸ் போன்ற கார்களுடன் நேரடியாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு கார்களுமே சிறப்பான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல்வேறு இன்ஜின் தேர்வுகளைக் கொண்டுள்ளன.

விலை விவரம்

இதில் விலை, பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்கள் அடிப்படையில் எது சிறந்தது எனப் பார்ப்போம். புதிய ரெனால்ட் டஸ்டரின் எக்ஸ் ஷோரூம் ஆரம்ப விலை ₹10.49 லட்சமாக உள்ளது. இதன் மற்ற வேரியண்ட்கள் ₹18.49 லட்சம் வரையிலும், டூயல் டோன் டாப் வேரியண்ட் ₹18.69 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.

மறுபுறம், மாருதி சுஸுகி விக்டாரிஸ் காரின் எக்ஸ் ஷோரூம் ஆரம்ப விலை ₹10.50 லட்சமாகத் தொடங்கி, டாப் ஸ்பெக் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட் ₹19.99 லட்சம் வரை விற்பனையாகிறது. ஆரம்ப விலையைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்றுபோலவே உள்ளன.

இன்ஜின் எப்படி?

டஸ்டர் காரில் 1.0 லிட்டர் TCe 100 டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் TCe 160 டர்போ பெட்ரோல் ஆகிய இரண்டு இன்ஜின் தேர்வுகள் உள்ளன. இதன் அதிக சக்திவாய்ந்த இன்ஜின் 163 PS பவர், 280 Nm டார்க் திறனைத் தரும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு DCT வசதிகள் உள்ளன.

விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் தேர்வுகள் தரப்பட்டுள்ளன. இதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் 28.65 kmpl ARAI மைலேஜ் எனப்படும் ரேஞ்ச் திறனைத் தருகிறது. செயல்திறனில் டஸ்டர் ஸ்போர்ட்டியாகவும், சிறந்த மைலேஜ் மற்றும் இன்ஜின் தேர்வுகளில் விக்டாரிஸ் சிறந்ததாகவும் உள்ளது.

டஸ்டரில் 10.1 இன்ச் ஓபன்ஆர் லிங்க் மல்டிமீடியா சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 360-டிகிரி 3டி கேமரா ஆகிய பிரீமியம் வசதிகள் உள்ளன. இதன் டாப் வேரியண்டில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட்மென்ட் வசதியும் இடம்பெற்றுள்ளது. சிறப்பம்சங்கள் அடிப்படையில் விக்டாரிஸ் காரும் சிறந்து விளங்குகிறது. இதில் 10.1 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ எக்ஸ் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி ஆடியோ, பனோரமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் பவர்டு டெயில்கேட், 64-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் டிஜிட்டல் கீ போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

யார் எதை தேர்வு செய்யலாம்?

வலிமையான டர்போ பெட்ரோல் இன்ஜின், சிறந்த ஓட்டுநர் அனுபவம் மற்றும் ஒரு கரடுமுரடான எஸ்யூவி வடிவமைப்பு ஆகியவற்றை மட்டுமே பிரதானமாக விரும்புவோருக்கு புதிய ரெனால்ட் டஸ்டர் ஒரு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

ஆனால் உங்களுக்கு அதிக மைலேஜ், சிஎன்ஜி, ஹைப்ரிட் வசதிகள் மற்றும் பல விதமான பவர்ட்ரெய்ன் தேர்வுகள் கட்டாயம் தேவைப்பட்டால், அதற்காக மாருதி சுஸுகி விக்டாரிஸ் காரை வாங்குவதே உங்களுக்கு அனைத்து வகையிலும் மிகவும் சரியான முடிவாக இருக்கும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
Mahindra முதல் Tata வரை.. இந்திய சந்தைக்கு வரப்போகும் 4 காம்பேக்ட் எஸ்யூவி - என்னென்ன கார் தெரியுமா?
Mahindra முதல் Tata வரை.. இந்திய சந்தைக்கு வரப்போகும் 4 காம்பேக்ட் எஸ்யூவி - என்னென்ன கார் தெரியுமா?
ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி; யாருக்கெல்லாம்? எந்தெந்த கார்களுக்கு? டாடா டக்கர் அறிவிப்பு!
ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி; யாருக்கெல்லாம்? எந்தெந்த கார்களுக்கு? டாடா டக்கர் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனாவா இது?.. ஸ்டைலான உடையில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனாவா இது?.. ஸ்டைலான உடையில் வெளியான வீடியோ.. நடந்தது என்ன?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Embed widget