TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TVK: ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது என்று தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் முதலமைச்சர் விஜய் பற்றியும், அமைச்சர் கீர்த்தனா பற்றியும் ஒருமையில் தரக்குறைவாக பேசினார்.
ஒருமையிலும், அவதூறாகவும் பேசிய துரை சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆபாச வார்த்தை தாக்குதல்:
இந்த நிலையில், தவெக ஐடி விங் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
ஆபாச திமுக! “பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள். “பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள். ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
பெண் விடுதலைக் கோட்பாடா?
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா? தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
ஆபாச திமுக!
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 23, 2026
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின்… pic.twitter.com/aHSKJaw8hq
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
ஆபாச ஐடி விங்:
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
சட்டத்தின் மொழியில் பதில்:
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும், அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று! ஆனால் காலம் மாறிவிட்டது. முதலமைச்சர், வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















