மேலும் அறிய

மதுரையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்காததால் மாணாக்கர் சிரமம் - கல்வியாளர்கள் கடும் கண்டனம்

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில்  இரவு தொடங்கி காலை வரை தொடரும் பரவலான மழை - பள்ளி விடுமுறை அளிக்காத நிலையில் மாணாக்கர் சிரமம் - மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  
பள்ளிகளுக்கு விடுமுறை:  
 
இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையின் தன்மை குறித்து ஆய்வு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். கரூர், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில் தொடர் கனமழை 

 
தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலியில் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த சூழலில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில்  இரவு தொடங்கி காலை வரை தொடரும் பரவலான மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில் மாணாக்கர் சிரமம் அடைந்துள்ளனர். 
 
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணாக்கர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் செயலுக்கு கல்வியாளர்கள் பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
போக்குவரத்து நெரிசல்
 
மதுரை மாநகர் பகுதியில்  நள்ளிரவு முதல் காலை வரை மாநகரின் மையப் பகுதியான சிம்மக்கல், புதூர், காளவாசல், ஆனையூர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில் மாணாக்கர்கள்  கடும் சிரமத்துடன் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் செல்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
 
 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget