TN Rains: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளுக்கும் மழை! அடுத்த 5 நாள் இதுதான் நிலவரம்!
School leave: மழை காரணமாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் என இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் தெரிவித்தார்,
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் இன்று ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இன்று (12.12.24) கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் அறிவித்துள்ளார்.
இன்று 12.12.2024 செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் இன்று 12.12.2024 பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
வானிலை நிலவரம் என்ன;?
12-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை : ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர். கரூர். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது
13-12-2024: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-12-2024 மற்றும் 15-12-2024 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-12-2024 மற்றும் 15 12 2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-12-2024: கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-12-2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.