மேலும் அறிய
Advertisement
Dog Adoption: தெரு நாய்கள் தத்தெடுக்கும் முகாம் - மதுரை மக்கள் வரவேற்பு
செல்லப் பிராணிகளை செல்லமாக கொஞ்சி மகிழ்ந்த குழந்தைகள் -ஆர்வத்தோடு தத்தெடுத்துச் சென்ற தம்பதியினர்.
தெரு நாய்களை தத்தெடுக்கும் முகாம் ஒன்று துவங்கப்பட்டிருப்பது மதுரை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தெரு நாய்கள் தத்தெடுக்கும் முகாம்
மதுரையில் வள்ளலார் உதவும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பில் மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தெரு நாய்கள் மற்றும் பூனைகள் தத்தெடுக்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அதன் 2-வது தத்தெடுக்கும் முகாம் மதுரை பைபாஸ் ரோடு ஈகிள் பார்க்கில் நடைபெற்றது. அதில் பொதுமக்கள் தங்களுக்கு, தங்கள் வீடுகளில் வளர்ப்பதற்காக நாய்களை தத்தெடுத்து சென்றனர். தெருநாய்கள் மற்றும் பூனைகள் தத்தெடுக்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரக்கூடிய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், இங்கே வைக்கப்பட்டிருந்த தெரு நாய் குட்டிகள் மற்றும் பூனை குட்டிகளை ஆர்வமுடன் தொட்டுப் பார்த்ததோடு மட்டுமல்லாது அவற்றை தூக்கி மகிழ்ச்சியோடு கொஞ்சவும் செய்தனர். இவ்வாறு பெற்றோர்களோடு வந்த குழந்தைகள் ஒருபுறம் நாய்க்குட்டிகளை கொஞ்சி மகிழ இந்த முகாமின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வந்திருந்த பெற்றோர்களுக்கு ”தெரு நாய்கள் மற்றும் பூனைகள் குறித்த வளர்ப்பு முறை மற்றும் நாய்களை விலைக்கு வாங்காதீர்கள். அவற்றை தத்தெடுத்து வளருங்கள்” என்றனர். எகிப்து சினிமாக்களில் நாம் பார்ப்பது போன்று கைகளில் பூனையை ஒய்யாரமாக வைத்துக்கொண்டு வரக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர்.
துன்பத்தை தடுக்க வேண்டும்
வள்ளலார் உதவும் கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு கவுன்சிலருமான ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தை தடுக்கும் வகையில், நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையிலும் இது போன்ற தத்தெடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளாகிய சிறுமி, பள்ளி செல்லும் மாணவர்கள், இளைஞர் பட்டாளம் என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை செய்யப்படுகிறது. தெரு நாய்களை தத்தெடுப்பதன் மூலம் நாம் சமூகத்தை ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்” என தெரிவித்தார்.
வரவேற்பை பெற்ற முகாம்
முறையான பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனை உள்ளிட்டவைகளோடு வளர்த்தால், நிச்சயம் இவை செல்லப் பிராணிகளே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எத்தனையோ மேலை நாட்டு நாய்க்குட்டிகள் வந்தாலும் இன்றளவும் நம் நாட்டின நாய்களுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிற்கு ஒரு காவலாளியாக வயல்வெளிக்கு ஒரு காவலாளியாக இன்றளவும் நாட்டின நாய்கள் இருக்கத்தான் செய்கின்றது. பொதுவாக குளிரூட்டப்பட்ட அரங்குகளில் உயர்ரக விலை உயர்ந்த நாய்களுக்கான நாய் கண்காட்சி உள்ளிட்டவைகள் சமீபகாலமாக நடத்தப்பட்டு வரக்கூடிய வேளையில், தெரு நாய்களை தத்தெடுக்கும் முகாம் ஒன்று துவங்கப்பட்டிருப்பது மதுரை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - VCK Ravikumar : ”பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தும் முருகன் மாநாடு” விசிக எம்.பி. ரவிக்குமார் கடும் எதிர்ப்பு – கூட்டணியில் சலசலப்பு..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion