மேலும் அறிய
Advertisement
மதுரை மல்லி... மதுரை மல்லி... பயணிகளே மறக்காம வாங்கிட்டு போங்க..!
இந்த புதிய திட்டத்தின் மூலம் உள்ளூர் சிறு வியாபாரிகள் பயன்பெறுவதோடு அவர்களது வாழ்க்கை தரமும் உயர வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது
மல்லிகை மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
ஒரு நிலையம், ஒரு பொருள்
பாரம்பரியமிக்க, பழமையான உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை அமைக்க ரயில்வே துறை ஏற்பாடு செய்தது. இதன்படி நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கான ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டு புடவை, தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருட்கள், திருசெந்தூர் ரயில் நிலையத்தில் பனை பொருட்கள், பழனி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருட்கள், உள்ளிட்ட பனைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
35 ரயில் நிலையங்களில் 44 விற்பனை நிலையங்கள்
தற்போது மதுரை கோட்டத்தில் 35 ரயில் நிலையங்களில் 44 விற்பனை நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ரயிலில் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியான தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் இரண்டாவது கோட்டம் மதுரை கோட்டமாகும். மதுரையின் பிரபல பொருளான மல்லிகை மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது. அதேபோல திண்டுக்கல் நகரில் பிரபலமான பூட்டுக்களும் தள்ளு வண்டியில் விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் உள்ளூர் சிறு வியாபாரிகள் பயன்பெறுவதோடு அவர்களது வாழ்க்கை தரமும் உயர வழி வகுக்கிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ilaiyaraja: இளையராஜா சென்ற கோயிலில் நடந்தது இதுதான்! அறநிலையத்துறை விளக்கம்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion