மேலும் அறிய
உசிலம்பட்டிக்கு 30 ஆண்டுகளுக்குப் பின் ஐ.ஏ.எஸ் அதிகாரி அப்பாயிண்ட்மென்ட் ; யார் இந்த உட்கர்ஷ்குமார்?
நூற்றாண்டு பழமையான உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவி ஆட்சியராக பதவியேற்றார்.

உட்கர்ஷ்குமார் ஐ.ஏ.எஸ்
Source : whats app
மதுரை: உசிலம்பட்டிக்கு 30 ஆண்டுகளுக்குப் பின், நூற்றாண்டு பழமையான அலுவலகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி! எதிர்பாராத திருப்பம்?
உசிலம்பட்டி பகுதியும் வறட்சியும்
மதுரை மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியாக பார்க்கப்படுவது உசிலம்பட்டி தான். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டத்திற்கும் மையமாக இருக்கும் உசிலம்பட்டி, அதிக கிராமங்களை கொண்டுள்ளது. ஆனால் இங்கு விவசாயம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என, இளைஞர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு என பயணித்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இங்குள்ள பலரும் வடமாநிலங்களில் முறுக்கு சுற்றும் தொழிலை அதிகளவு செய்து வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் கால்கடை வளர்ப்பிற்கு கூட தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்காக பல போராட்டங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் நூற்றாண்டு பழமையான உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவி ஆட்சியராக பதவியேற்றுள்ளார். இதனை உசிலம்பட்டி பகுதி சமூக ஆர்வலர்லகள் வரவேற்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கியது.
பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றிய உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம்
ஐ.சி.எஸ் படித்த பேர்பிரைன், லாக்லின் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பண்டா, ஸ்ரீபதி, ஷீலாபிரியா, சௌபே, ஹேமந்த்குமார் சின்கா ஆகியோரும் கடந்த 1994 ஏப்ரல் முதல் 1995 செப்டம்பர் வரை பாபுலால் மீனா உதவி ஆட்சியராக பணியாற்றினார். அதன் பின் வருவாய் கோட்டாச்சியர்களே நியமிக்கப்பட்டு வந்த சூழலில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியராக பணியாற்றிய சண்முக வடிவேல் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்துள்ள உட்கர்ஷ் குமார் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக பதவியேற்றுக் கொண்டார். இதனை உசிலம்பட்டி பகுதி சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு பிரச்னைகள் உள்ள சூழலில் 30 ஆண்டுக்குப் பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள சூழலில் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து புதிய ஆர்.டி.ஓ., சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















