மேலும் அறிய
Advertisement
Madurai: பழமையான ராணி மங்கம்மாள் அரண்மனை 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி தொடங்கியது
இன்னும் ஒரு வருடத்திற்குள் பணி முடியும் எனவும் பணிநிறைவடைந்த உடன் அரண்மனை புதுப்பொலிவுடன் சுற்றுலா தளமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
#Madurai | மதுரையில் நூற்றாண்டு பழமையான ராணி மங்கம்மாள் அரண்மனை 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி துவக்கம்.
— Arunchinna (@iamarunchinna) June 14, 2022
Further reports to follow @abpnadu#building | @Pradeeppdk | @Rameshgemini | @bjpmpriya | @rameshanr7274 | @rkkrish89 | @hari_rs_jo | @LPRABHAKARANPR3 | @abpnadu pic.twitter.com/dBOZX4ZlNS
ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் அருகே 1689 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 333 ஆண்டுகள் பழமையான அரண்மனை உள்ளது.
தற்போது பொதுப்பணித்துறை அலுவலகமாக செயல்பட்டு வரும் இந்த அரண்மனையை புனரமைக்க வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்த நிலையில், இந்த அரண்மனையை பழமை மாறாமல் 1.98 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக பொதுப்பணித்துறையின் பிரதான சின்னங்கள் பாரமரிப்பு பிரிவு சார்பாக புனரமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. மேலும் இந்த அரண்மனை வளாகத்திற்குள் பழமையான சிறைச்சாலை, உருளை வடிவ படிக்கட்டுகள் என பல்வேறு பிரிவுகளை அதனை பழமை மாறாமல் கடுக்காய் கருப்பட்டி, சுண்ணாம்பு கலவை மூலம் 8447 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை : இது என்னடா புது சோதனை! உலக மாடல் தோனி..உள்ளூர் பாத்ரூமுக்கு போஸா? கொந்தளித்த ரசிகர்கள்..
இன்னும் ஒரு வருடத்திற்குள் பணி முடியும் எனவும் பணிநிறைவடைந்த உடன் அரண்மனை புதுப்பொலிவுடன் சுற்றுலா தளமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 50 கோடி மதிப்பிள் பிரதான சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டு புனரமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீஙக பாஸ் - Palani Temple: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை நிறுத்தம் - எத்தனை நாள் தெரியுமா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion