மதுரை : இது என்னடா புது சோதனை! உலக மாடல் தோனி..உள்ளூர் பாத்ரூமுக்கு போஸா? கொந்தளித்த ரசிகர்கள்..
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் புகைப்படத்தை மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவறையில் மாடலாக வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை என்றாலே எப்பொழுதும் பரபரப்புதான். உலக வரலாறு முதல் உள்ளூர் சினிமா வரை போஸ்டர், பேனர் வைத்து அப்படி கொண்டாடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது போலவும், அஜித், கமல்ஹாசன் என மதுரை ரசிகர்களின் வெற்றிதனம் போஸ்டர்கள் மூலம் வெளிப்படும்.
மதுரையில் திருவிழாக்களுக்கும் பஞ்சம் இருக்காது, அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. மதுரை மக்களின் மனங்களை தொட்டுவிட்டால் மகத்தான வெற்றி என்று அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்படும். அப்படி பாசக்கார பயலுக ஊர்.
இப்படி ஒருபுறம் யார் யாரையோ கொண்டாடும் ஊரில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு கழிவறை ஒன்றில் விளம்பர மாடலாக வைக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூஸ்ட், டிவிஎஸ், உஷா, ஓரியோ பிஸ்கட் என அனைத்து விளம்பரங்களிலும் நடித்து இந்தியாவில் கிரிக்கெட்டை கடந்து நாயகனாக உதயமானார்.
தொடர்ந்து, பல்வேறு விதமான விளம்பரங்களில் நடித்து இந்திய அளவில் எப்பொழுதும் டிரெண்டிங்கில் இருக்கிறார். இப்படி புகழ்பெற்ற ஒருவரை மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவறையில் மாடலாக வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் தோனி போட்டோ!https://t.co/wupaoCQKa2 | #MSDhoni #madurai #Dhoni pic.twitter.com/YBusUFO8lv
— ABP Nadu (@abpnadu) June 13, 2022
இதைப்பார்த்து கொதித்தெழுந்த தோனி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் சமூக வலைத்தளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகராட்சிதான் இதற்கு முக்கிய காரணம் என்றும், உடனடியாக தோனியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை தமுக்கம் மைதானத்திற்கு அருகில் உள்ள இராஜாஜி சிறுவர் பூங்கா முன்பு காதலர்களை கொச்சைப்படுத்தும் விதமாக நாய் காதல் செய்யாதீர்கள் என்று பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதுவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்