மேலும் அறிய

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின்  விரோதபோக்கை திமுக அரசு தொடர்ந்தால் எடப்பாடியார்  தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் - ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின்  விரோதபோக்கை தி.மு.க., அரசுதொடர்ந்தால் எடப்பாடியார்  தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்”. என தெரிவித்துள்ளார்.

வீடியோவில் பேசியுள்ளது..”முல்லைப் பெரியார் அணையில் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில்,  கடந்த 5-ம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். இதனால் தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  ரூட் கர்வ் மூலம் திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் மூன்று மதங்கள் மூலம் திறந்துள்ளார்கள். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை  தி.மு.க., அரசு நிகழ்த்தியுள்ளது. 
 
Theni: Detailed project report ready for construction of new dam in Mullaperiyar... Controversy due to Kerala Minister's facebook post
 
விவசாயிகளின் இரண்டு ஆண்டு கால  நம்பிக்கை தி.மு.க., அரசு சீர்குலைத்துள்ளது. இதனால் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும்,  தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி  ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, முல்லைப் பெரியார் அணையில் இருந்து இடுக்கி அணைக்கு கேரள அரசின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது, அதை கேரள அமைச்சர் ரோசி அகஸ்டின் அணைக்குச் செல்லாமல் வல்லக்கடவு பகுதியில் தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.
 
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்
 
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக  உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்கள். அம்மா முதலமைச்சர் இருந்த போதும், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போதும், மூன்று முறை முல்லை பெரியார் அணைநீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப்பட்டது. எடப்பாடியார் தற்பொழுது முதலமைச்சர் இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது தி.மு.க., அரசு கேரளா அழுத்தத்தை தூக்கி ஏறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.
 
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்
 
கேரளா முதலமைச்சர் வியாழக்கிழமை கடிதம் எழுதுகிறார், அதற்கு வெள்ளிக்கிழமை பேசி வைத்த நாடகம் போல், விடியா தி.மு.க., அரசு தண்ணீரை திறக்கிறது. கேரளா அழுத்தத்திற்கு அடிபணிய கூடாது, என்பதை விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த பிறப்புரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி விவசாயிகளை தி.மு.க., அரசு நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது. கடிதத்திற்கு அடுத்த நாள் தண்ணீர் திறந்து விட்டது கடும் கண்டனத்துக்குரியது. 
 
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்
 
தமிழக அரசு  தமிழக விவசாயிகளை பாதிக்கும், ரூட் கர்வ்யை  மாபெரும் சட்ட போராட்டத்தை தொடர்ந்து மக்களை உரிமையை காத்திருக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின்  விரோதபோக்கை, தி.மு.க., அரசு தொடருமேயானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அனுமதியை பெற்று, எடப்பாடியார்  தலைமையில், ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget