மேலும் அறிய
மதுரையில் நாளை (30.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள் என்னென்ன? - முழு விவரம் இதோ
Madurai Power Shutdown (30.05.2025): மதுரையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு.

மதுரையில் மின்தடை
Source : ABPLIVE AI
மதுரையில் பல்வேறு இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை
மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (30.05.2025) காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும்.
செயற்பொறியாளர் தகவல்
பராமரிப்பு பணிக்காக சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்.
காலை 10:00 மதியம் 2:00 மணி
அழகர்கோவில் பகுதி
நாயக்கன்பட்டி, பொய்கைக்கரை பட்டி, கள்ளந்திரி, அழகாபுரி, அழகர் கோவில் மாத்தூர், அப்பன் திருப்பதி, பூண்டி, M.செட்டிகுளம்.
மேலூர் சுற்றுவட்டாரம்
எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, வினோபா காலனி, புதுசுக்காம்பட்டி, புலிப்பட்டி, கீழையூர், அட்டப்பட்டி, பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, லெட்சுமிபுரம்.
வெள்ளலுார் நாடு
நயத்தான்பட்டி, மேலவலசை, வெள்ளலுார், கோட்டநத்தாம் பட்டி, புதுப்பட்டி, கூலிப்பட்டி.
ராஜாக்கூர் பகுதி
விளாத்துார், எம்.டி.எஸ்., ஸ்கூல், ராஜாக்கூர், சின்ன ராஜாக்கூர், பெரியார் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகு திகள், வரகனேரி, நாட்டார்மங்கலம், கருப்புக்கால், வெள்ளிமலை பட்டி, குன்னத்தூர், களிமங்கலம், சக்குடி, வாழவந்தான்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















