மேலும் அறிய
மதுரையில் நாளை (23.09.2025) மின்தடை... உங்க ஏரியா லிஸ்டில் இருக்கா?
மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, முழு லிஸ்டை செக் பண்ணுங்க.

மின்தடை ஏற்படும் பகுதிகள்
Source : whats app
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 23, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
மதுரை மாநகர் - பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும் பொன் நகர், பத்திர ஆபீஸ், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோயில், அருண் நகர், அவர்லேடி பள்ளி, காயத்ரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச் சாமி நகர், கோவலன் நகர், ஓய்.எம். சி.ஏ., நகர், இ.பி., காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டகாரன்பட்டி ஒரு பகுதி, முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம் 2 பிட், பைக்கரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெரக்கா நகர், பெத்தானி நகர், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி, மஹாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந் திரா நகர், மீனாட்சி நகர், பாம்பன் நகர், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி.
அழகர்கோயில் பகுதிகள்
பொய்கைக்கரைப்பட்டி, நாயக் கன்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்துார், சுந்தரராஜன்பட்டி, வெள்ளியங்குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனூர், தேத்தாம்பட்டி, மந்திகுளம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















