ஜிஎஸ்டி குறைப்பு, வாக்கு திருட்டு குற்றச்சாட்டு! பாஜகவுக்கு விஜய் ஆதரவு? அர்ஜுன் சம்பத் பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழகத்தில் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திமுக அரசை கலைக்க வேண்டும். தேனியில் அர்ஜூன் சம்பத் பேட்டி.
தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி நிர்வாகி இல்ல நிகழ்விற்கு இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் வருகை தந்தார். தேனி பொம்மையை கவுண்டன் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத் கூறுகையில், ஜிஎஸ்டி வரி விகிதம் மிகவும் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவின்படி பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் நடவடிக்கையால் ஜிஎஸ்டி வரி விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் பயனடுத்தக்கூடிய வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் குறைந்துள்ளது. தீபாவளி பரிசாக பிரதமர் ஜி.எஸ்.டி வரி விதிப்பை குறைத்தார். ஆனால் தமிழகத்தில் ஹோட்டல்களில் விலை குறையவில்லை.
உணவு பண்டங்கள் விலை குறைப்பதற்கு தமிழக அரசு தடையாக இருக்கிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு குறைவானது. மக்களுக்கு சேராமல் உள்ளது. வரிவிதிப்பை குறைப்பதால் மாநில வருவாய் குறைகிறது என்கிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு. மக்களுக்கு பலன்கள் சென்றடையாமல் உள்ளது. இதை தாண்டி மத்திய அரசு மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. இதற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் வேலை நடைபெற்று வருகிறது. வாக்காளர் பெயர் திருத்தம் மாற்றம் செய்து வருகின்றனர். ஆனால் திட்டமிட்டு திமுக அரசு பாஜக விற்கு யார் எல்லாம் வாக்களிப்பார்களோ அவர்களை எல்லாம் பட்டியலில் சேர்க்காமல் வாக்கு திருட்டு செய்து வருகிறது. உண்மையில் வாக்கு திருட்டு செய்து வருவது திமுக காங்கிரஸ் தான். பல்வேறு பாணியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பிரியாணி விருந்து என்று செய்து வருகிறது. மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிறுபான்மை மக்களிடத்தில் மத அடிப்படையில் வாக்குகளை சேகரித்து வருகிறது திமுக. பா.ஜ.க கூட்டணியில் அதிமுக இருந்தால் ஓட்டளிக்கக்கூடாது என்று. சர்ச், மசூதிகளில் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று மத அடிப்படையில் பிரசாரம் செய்கிறார்கள். இதனை கம்யூனிஸ்ட்கள் ஊக்குவிக்கிறார்கள். நடிகர்கள் பிராகாஷ்ராஜ், சத்யராஜ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் காசாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். இதன் மூலம் திமுகவிற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்திய அரசு காசா நாட்டுக்கு உணவு பொருட்களை அனுப்பியது.
மத்திய அரசும் தேர்தல் கமிஷனும் வாக்கு திருட்டு என்று கூறிவரும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமிழகத்தில் 2026 தேர்தல் நியாயாமாக நடைபெற வேண்டும் என்றால் குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு 6- மாத காலத்திற்கு முன்பு திமுக அரசினை கலைக்க வேண்டும் என்றார். திமுக எதிர்ப்பு வாக்குகள் பா.ஜ.கவிற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய் வந்துள்ளார். இவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார். முன்பு கமல் வந்தார் தற்போது விஜய் வந்துள்ளார். ஆகவே ஜோசப் விஜய்-ன் திமுக எதிர்ப்பு பேச்சு என்பது நடிப்பு நாடகம் என்று கூறினார்.





















