Madurai Power Shutdown: மதுரை மின் தடை: நாளை (10.06.2025) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! காரணம் என்ன?
Madurai Power Shutdown 10.06.2025: மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இந்நிலையில் மதுரை சமயநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக சமயநல்லூர் பகுதி மின் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்.




















