மேலும் அறிய
Advertisement
Madurai Power Shutdown: மதுரை மக்களே உஷாரா இருங்க... நாளை இங்கெல்லாம் கரெண்ட் இருக்காதாம்
Madurai Power Shutdown 15.11.24 அன்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (15.11.2024) அன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின்பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மதுரை சமயநல்லூர் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி மாணிக்கம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் கீழே உள்ளது.
மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, ஈரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
அலங்காநல்லூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர் மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Rain Alert: தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வரை கனமழை தொடரும் - வானிலை அப்டேட்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உடல்நலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion