வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை மீறி குளித்த சிறுவர்கள் - எச்சரித்த போலீஸ்
வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை மீறி ஆபத்தான முறையில் ஆற்றில் குளித்த சிறுவர்கள் மற்றும் தண்ணீரில் சிக்க திணறிய இளைஞர்களை எச்சரித்து காவல்துறையினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தூண்டிலில் 100கிராம் முதல் 500 கிராம் எடை அளவுல்ல மீன்களும் தூண்டிலில் சிக்குவதால் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்துச் செல்கின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்பு வைகையாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் யானைக்கல் தடுப்பணையில் தூண்டில் மூலமாக மீன்களை பிடித்து வருகின்றனர். அப்போது ஏராளமானோருக்கு தூண்டிலில் பெரிய அளவிலான கெண்டை மீன்கள் சிக்குவதால் அதிகளவில் மீன்களை பிடித்து சாக்குமூட்டைகளில் எடுத்துச் செல்கின்றனர். இதே போல ஆற்றுபகுதிகளில் கரைகளை ஒட்டி ஏராளமானோர் தூண்டிலில் மீன்பிடித்துவரும் நிலையில் தூண்டில் போட்டவுடன் மீன் சிக்குவதால் அதிகளவில் மீன்களை பிடித்துவருகின்றனர். தூண்டிலில் 100 கிராம் முதல் 500 கிராம் எடை அளவுல்ல மீன்களும் தூண்டிலில் சிக்குவதால் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்துச் செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஆழமான தண்ணீர் செல்லக்கூடிய பகுதியில் எச்சரிக்கையை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களையும் காவல்துறையினர் வெளியேற்றினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: 5 அடி உயர தண்ணீரில் சிக்கி தவித்த பார்வையற்றவர்கள் பாடல் குழு! மதுரையில் பரபரப்பு!