மேலும் அறிய
Advertisement
Madurai: ரூ. 60 வழிப்பறி வழக்கு: 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர்: தட்டித்துக்கிய போலீஸ்
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட பன்னீர் செல்வம் பிடிவாரண்ட் என்பதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த மதுரை காவல்துறையினர். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல்துறையினர்.
மதுரையில் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி
மதுரை மாநகர் அண்ணாநகர் ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60 ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார். காவல்துறையினர் பல இடங்களில் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இவர் மீது நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடித்து வழக்கு விசாரணைகளை முடிப்பதறகான நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் காவல்துறையினர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர்.
ஒயின் ஷாப் ஒன்றில் பணிபுரிந்துவந்த பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர்
இதன் தொடர்ச்சியாக வழிப்பறி வழக்கில் தேடப்பட்டுவந்த பன்னீர்செல்வம் குறித்து ஜக்காதோப்புக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல் தெரியவந்துள்ள்து. இதனையடுத்து சிவகாசிக்கு விரைந்த தனிப்படை கவால்துறையில் சிவகாசி காவல்துறையினர் மற்றும் தெப்பக்குளம் காவல்துறையினருடன். இணைந்து சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதிசெய்தனர். இதைதொடர்ந்து சிவகாசியில் ஒயின் ஷாப் ஒன்றில் பணிபுரிந்துவந்த பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு ஆணையாளர் லோகநாதன் பாராட்டு தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பன்னீர் செல்வம் பிடிவாரண்ட் என்பதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
நிதி மேலாண்மை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion