அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
EdelGive Hurun இந்திய நன்கொடையாளர்கள் 2024 பட்டியலில் HCL நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார் முதல் இடம் பிடித்துள்ளார்.
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான HCL நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார், நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். EdelGive Hurun இந்திய நன்கொடையாளர்கள் 2024 பட்டியலின்படி, அவர் ஆண்டுக்கு 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய ஷிவ் நாடார்:
கடந்தாண்டும், ஷிவ் நாடாரே முதல் இடம் பிடித்திருந்தார். விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இந்த முறை, நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் ஷிவ் நாடார்.
இந்தாண்டு, இரண்டாம் பிடித்துள்ள முகேஷ் அம்பானியின் குடும்பம், ஆண்டுக்கு 407 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். கொடை முயற்சிகளை பொறுத்தவரை ஷிவ் நாடார் கல்வியில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
எஸ்எஸ்என் நிறுவனங்கள், வித்யாகியான், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பள்ளி, ஷிக்சா இனிஷியேட்டிவ் மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் போன்றவை ஷிவ் நாடார் அறக்கட்டளை செயல்பாடுகளில் அடங்கும்.
அதிக நன்கொடை கொடுத்தது யார்?
அம்பானியை பொறுத்தவரை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, விளையாட்டு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, பெண்கள் முன்னேற்றம், கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்காக அதிக அளவில் நன்கொடை செய்துள்ளார்.
இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் பட்டியலில் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, Zerodha நிறுவனர்கள் நிகில் மற்றும் நிதின் காமத் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.
பெண்களை பொறுத்தவரை, ரோகினி நிலேகனி 154 கோடி ரூபாய் நன்கொடையுடன் மிகவும் தாராளமான பெண் நன்கொடையாளராக உருவெடுத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கொரோனா இரண்டாவது அலையின் போது ஒவ்வொரு நாளும் 1,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
சுகாதாரம், கல்வி, நிலையான வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றில் 334 கோடி ரூபாய் நன்கொடையுடன் குமார் மங்கலம் பிர்லா பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அதானி குடும்பம், 330 கோடி நன்கொடை செய்து பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் குழுமம், 352 கோடி ரூபாய் நன்கொடை செய்து, பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க: CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்