மேலும் அறிய
மதுரை மக்களே அரிசி அட்டைதாரர்களுக்கு காத்திருக்கும் பொங்கல் பரிசு.. டோக்கன் விவரம் இதோ!
தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுச் கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்
Source : whatsapp
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது
தைப்பொங்கல்-2026
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3,000- ஆகியவை அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கப்படவுள்ளது.
டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது
மேற்கண்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுச் கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















