மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 11, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
* பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி.
* ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, ஐராவத நல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனார் புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு.
* தெப்பக்குளம், அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, அனுப்பானடி, குருவிக் காரன் சாலை, காமராஜர் ரோடு, பங்கஜம் காலனி, தங்கம் நகர், வடிவேல் நகர், அழகர் நகர், மீனாட்சி நகர், கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, சி.எம். ஆர்., ரோடு, என்.எம்.ஆர். புரம், மீனாட்சி அவென்யூ, திருமகன் நகர், இந்திராநகர், பழைய குயவர் பாளை யம், சின்னக் கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், லட்சுமிபுரம் முதல் 6 தெருக்கள், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், புதுமீனாட்சி நகர்.
* அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, மார்க்கெட், செம் பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலா னந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார் நகர், ரிங்ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசித் தோட்டம், பெரியரதவீதி குடியிருப்பு, பாம்பன் நகர், பாப்பாக் குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், ஏர்போர்ட் குடியிருப்பு.
* இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, ராஜிவ் காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பல காரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம். நகர், தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின் நகர், ஜூப்லி டவுன், மருதுபாண்டியர் நகர், யாகப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.